!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



126.அவள் மெல்ல சிரித்தாள்


வருடம்   
1964                                      
பாடலாசிரியர்
கண்ணதாசன்  
படம்    
பச்சை விளக்கு                 
இசை
எம்.எஸ்,விஸ்வநாதன்                                
பாடியவர்
பி.சுசீலா  

                      
                           பாடல் வரிகள்

அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை    (அவள் )

ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண் மயில் எழுந்து நின்றாள்
பாரடி பாரடி பாவையின் ஆசையை ஓரடி ஈரடி நடக்கின்றாள் (அவள்)

அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை
வந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தான்
காதலன் காதலி நாடகம் ஆயிரம் நாளொன்று போனது இளமையிலே (அவள்)


No comments:

Post a Comment