!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



125.அவள் பறந்து போனாளே


வருடம்
1963                                               
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்   
பார் மகளே பார்                  
இசை
விஸ்வநாதன் ராமமுர்த்தி
பாடியவர்
பி.பி.எஸ். & டி.எம்.எஸ்

.            
                           பாடல் வரிகள்

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரண்டைக்
கவர்ந்து போனாளே   (அவள்)

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை    (அவள்)

என் இதயத்தில் பூட்டிவைத்தேன் அதில்
என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்  (அவள்)


No comments:

Post a Comment