!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



124.அவள் ஒரு மேனகை



வருடம்  
1980                    
பாடலாசிரியர்
வாலி   
படம்    
நட்சத்திரம்                  
இசை
சங்கர்கணேஷ்       
பாடியவர்
எஸ்.பி.பி. 

                        
                                 பாடல் வரிகள்

அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவோடு நடமாடும் பொன்மகள் ரஞ்சனி
சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் இங்கே எவரும் இல்லை   (அவளொரு)

காவியப் பாதம் ஆயிரம் பேதம்
அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள நாதம்   (அவளொரு)

அவள் சிங்காரப் பூங்குழலாவணி மேகம்
தேனுலாவிடம் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் தேகம்
தாமரைப் பூவின் சூரிய தாகம்

காலமே அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
முடியோ ஆலயச் சங்கொலி
இடையோ அசைந்திடும் கிண்கிணி

என்ன சொல்லி என்ன பாட
கம்பனில்லை கவிதைபாட ஆஆஆஆஆ
அவள் தஞ்சைத் தரணியில் கொஞ்சும்
அழகிய கோவிலன்றோ
நான் அவளது பக்தனன்றோ   (அவளொரு)

No comments:

Post a Comment