123.அவள் ஒரு பச்சை குழந்தை பாடும்
வருடம்
|
1976
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
நீ ஒரு
மகாராணி
|
இசை
|
சங்கர்
கணேஷ்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி.
& பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அவளொரு பச்சைக்
குழந்தை
பாடும் பறவை
பருவம் பதினாறு
அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள்
வாழ்த்துதே (அவளொரு)
வாலைப்பருவம்
கேட்டது கேள்வி
விடை தர இங்கே
வந்தனள் தேவி
இளமையின் ரகசியம்
எதுவென அறிந்தது நெஞ்சம்
போகப் போகப்
புரிவது என்ன
போதையில் ஏதோ
வருவது என்ன
எனக்கென அதிசயம்
எதுவென விளக்கிடு கொஞ்சம்
இன்பத்தில் நீயும்
நானும் ஊமை இல்லையோ
மிச்சங்கள்
என்னென்ன நாளை என்று கூறவில்லையோ (அவனொரு)
நீயிருக்கும்
கண்ணில் நானிருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை
ஏற்று கொள்வாயா
நினைவிருக்கும்
நெஞ்சில் நீயிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே
என்னை ஏந்தி கொள்வாயோ
அச்சத்தை ஆசை
வந்து வெல்லக்கூடாதா
அம்மம்மா
நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ (அவளொரு)
No comments:
Post a Comment