122.அவள் ஒரு நவரச நாடகம்
வருடம்
|
1977
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
உலகம் சுற்றும்
வாலிபன்
|
இசை
|
விஸ்வநாதன்
ராமமுர்த்தி
|
பாடியவர்
|
எஸ்.பி.பி.
|
பாடல் வரிகள்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம் (அவள்)
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் (அவள்)
குறுநகை கோலத்தில் தாமரை
கோடைகாலத்து வான்மழை
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள் (அவள்)
அறுசுவை நிரம்பிய பாற்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை (அவள்)
No comments:
Post a Comment