121.அவள் என்ன நினைத்தாள்
வருடம்
|
1972
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
காசேதான்
கடவுளடா
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
பி.சுசீலா
.
|
பாடல் வரிகள்
அவள் என்ன
நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள்
அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்
அவன் ஏன்
துடித்தான் கட்டி கட்டி பிடித்தான்
அவள் காணாததை
அணைப்பில் கண்டாள்
ஓஹோ ஓஹோ ஆஹாஹா
ஆஹ்ஹா (அவள்)
நீ கிடைத்த
இடத்திலே பூப் பறிக்க நினைப்பதேன்
ஊர் சிரிக்கும்
விதத்திலே நீ இழுத்து அணைப்பதேன்
என் கன்னி உள்ளம்
என்னவாகும் இன்று
நீ கட்டி கொண்டு
காதல் செய்யக் கண்டு
நந்தவனமே
பள்ளியறையோ
பச்சை பசும்புல்
பஞ்சு மெத்தையோ
ஓஹோ ஓஹோ ஆஹாஹா
ஆஹ்ஹா (அவள்)
உன் சிவந்த
உதட்டிலே ஓர் வெளுப்பு இருப்பதேன்
பால் நிறத்தில்
இருக்குமே கண் சிவந்து கிடப்பதேன்
நீ வெக்கம் விட்டு
பக்கம் வந்து நில்லு
நீ கற்று கொண்ட
வித்தை என்ன சொல்லு
என்ன கலையோ என்ன
சுவையோ
தொட்டு தொடங்க
தொடரும் கதையோ
ஓஹோ ஓஹோ ஆஹாஹா
ஆஹ்ஹா (அவள்)
No comments:
Post a Comment