120.அலையே கடல் அலையே
வருடம்
|
1978
|
பாடலாசிரியர்
|
கங்கை
அமரன்
|
படம்
|
திருக்கல்யாணம்
|
இசை
|
இளையராஜா
|
பாடியவர்
|
பி.ஜெயச்சந்திரன்
எஸ்.ஜானகி
|
பாடல் வரிகள்
அலையே கடல் அலையே
ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்
இன்ப நினைவினில் பாடுகிறாய்
என்னென்னவோ உன் ஆசைகள்
பொன் மணல் மேடை மீதினிலே
வெண்பனி வாடை காற்றினிலே
மயக்கும் மாலை பொழுதினிலே
காதலி இந்த நாயகி
பல நாள் வரை காத்திருக்க
என்னென்னவோ உன் ஆசைகள்
ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்
இன்ப நினைவினில் பாடுகிறாய்
என்னென்னவோ உன் ஆசைகள்
பொன் மணல் மேடை மீதினிலே
வெண்பனி வாடை காற்றினிலே
மயக்கும் மாலை பொழுதினிலே
காதலி இந்த நாயகி
பல நாள் வரை காத்திருக்க
என்னென்னவோ உன் ஆசைகள்
அலையே கடல் அலையே
நீ உருகாதே மனம் கலங்காதே
உன் அருகினில் நான் இருப்பேன்
என்னென்னவோ உன் ஆசைகள்
வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே
வாடையில் வாடும் பனி மலரே
நெஞ்சினில் என்றும் உன் நினைவே
கண்மணி உயிர் காதலி
என் கைகளில் தவழ்ந்திருக்க
என்னென்னவோ என் ஆசைகள்
கோவிலைத் தேடி தவமிருக்க
தேவியின் நாயகன் துணையிருக்க
ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
தெய்வமே இளம் தென்றலே
எங்கள் காதலை வாழ வைப்பாய்
என்னென்னவோ நம் ஆசைகள் (அலையே)
பாடலாசிரியர்:- இளையபாரதி,
ReplyDeletenot GangaiAmaran. Pl. correct it.
திரைப்படம்:- திருக்கல்யாணம்;
ReplyDelete(வசந்தாலயா பிக்சர்ஸ்);
ரிலீஸ்:- 14th ஏப்ரல் 1978;
இசை:- இளையராஜா;
பாடல்:- இளையபாரதி;
பாடியவர்கள்:- S.ஜானகி, P.ஜெயச்சந்திரன்;
நடிப்பு:- ஸ்ரீவித்யா, விஜயகுமார்;
தயாரிப்பு:- R.வசந்தி;
டைரக்ஸன்:- K. சந்திரபோஸ்.