119.அல்லிப்பந்தல் கால்கள்
வருடம்
|
1965
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
வெண்ணிறாடை
|
இசை
|
விஸ்வநாதன்
ராமமுர்த்தி
|
பாடியவர்
|
எல்.ஆர்.ஈஸ்வரி
|
பாடல் வரிகள்
அல்லிப்பந்தல்
கால்கள் எடுத்து ஆட்டம் ஆடி வா
அங்கொரு மல்லிகை
கிள்ளி எடுத்து பாட்டு பாடி வா
அந்த நாடகம்
வரவிடு இந்த மேனியை செலவிடு
அந்த நாடகம்
வரவிடு இந்த மேனியை செலவிடு (அல்லி)
பொன்னோடு பூவோடு
கன்னியின் மெல்லிடை
கண்ணில் வந்து
விழுந்து
கண்ணோடு நெஞ்சோடு
கையோடு தந்தது
கனிந்தே வரும்
விருந்து
செங்கனிச்சாறு
பிழிந்து சிந்திவிடாமல் அருந்து
அந்த நாடகம்
வரவிடு இந்த மேனியை செலவிடு (அல்லி)
சந்திரன் பட்டதும்
பஞ்சணை சுட்டது
உன்னால் வந்த
மயக்கம்
மந்திரம் என்பது
அந்தியிலாவது
கிடைத்தால் அது
விளங்கும்
ஆடையில் பாடல்
முழங்கு ஜாடையில் காதல் வழங்கு
அந்த நாடகம்
வரவிடு இந்த மேனியை செலவிடு (அல்லி)
No comments:
Post a Comment