118.அலங்காரம் கலையாத
வருடம்
|
1976
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
ரோஜாவின்
ராஜா
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
பி.சுசீலா
|
.
பாடல் வரிகள்
அலங்காரம் கலையாத
சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில்
கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள்
பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம்
பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம்
பார்த்த ஒரு நாளிலே (அலங்காரம்)
கொத்தோடு பூக்கண்ட
பன்னீர் மரம்
பொன் மாலை
பெண்ணுக்கு மஞ்சம் தரும்
நீரோடு விளையாடிப்
போகின்ற தென்றல்
நீ கொஞ்சம்
விளையாட நெஞ்சம் தரும்
நீ கொஞ்சம்
விளையாட நெஞ்சம் தரும் (அலங்காரம்)
உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ
இல்லாயின்
இல்லென்று வான் செல்லவோ
எங்கே உன் பூப்பந்தல்
மேளங்களோடு
கல்யாணத் தமிழ்
பாடி நடமாடுவோம்
கல்யாணத் தமிழ்
பாடி நடமாடுவோம் (அலங்காரம்)
தான் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
அழகான மலர் மாலை
நாம் வாங்குவோம்
தேனாட்சி தான்
செய்யும் மீனாட்சி சாட்சி
திருவீதி வலம்
வந்து ஒன்றாகுவோம்
திருவீதி வலம்
வந்து ஒன்றாகுவோம் (அலங்காரம்)
No comments:
Post a Comment