117.அருள் வடிவே பரம்பொருள்
வருடம்
|
1970
|
பாடலாசிரியர்
|
தெள்ளூர்
தருமராசன்
|
படம்
|
வாழ்த்துங்கள்
|
இசை
|
எல்.வைத்தியநாதன்
|
பாடியவர்
|
கே.ஜே.ஜேசுதாஸ்
|
பாடல் வரிகள்
அருள் வடிவே
பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே
பொருளே புகழே
அருள் வடிவே
பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே
பொருளே புகழே (அருள்)
அவனன்றி வேறோர்
அணு அசையாதே........
அருந்தவ மேலோர்
நூல் பிழையாதே
வருவதை
நீதான் அறிந்திடுவாயே
வழித்துணை நீயே
காத்திடுவாயே
நினைவில்
நிறைந்திட நிதம் உனை தொழுவேன்
நீதி நீ ஜோதி நீ
நெறிமுறை அருள்வாய் (அருள்)
துணையென்று
சேர்ந்தால் கணை தொடுத்தாரே
அலை துரும்பானேன்
ஆதரித்தாயே
உனையின்றி வேறோர்
துணை இங்கு வேண்டாம்
கருணை இல்லாதோர்
தோழமை வேண்டேன்
மனை இருள்
மறைந்திட தினம் உனை பணிந்தேன்
மாசிலா மாமணி
மனங்கனிந்தருள்வாய் (அருள்)
No comments:
Post a Comment