!- START disable copy paste -->

Tuesday, May 19, 2015



116.அருவிமகள் அலை



வருடம்  
1970                               
பாடலாசிரியர்
வாலி
படம்     
ஜீவநாடி                           
இசை
தக்ஷ்ணாமுர்த்தி                                                    
பாடியவர்
கே.ஜே.ஜேசுதாஸ் & ராஜலட்சுமி 

                 
                    
                           பாடல் வரிகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அருவி மகள் அலை ஓசை இந்த
அழகு மகள் வளை ஓசை...
பொதிகை மலை மழைச் சாரல்...
உந்தன் பூவிதழின் மதுச் சாரல்.... (அருவி)

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேனொழுகும் குயிலோசை...என்
தலைவா உன் தமிழோசை...
தவழ்ந்து வரும் குளிர் காற்று...அது
சுமந்து வரும் உன் புது பாட்டு...   (தேனொழுகும்)

கடல் கொண்ட நீலம் கண் விழி வாங்க...
கனி கொண்ட சாரு இதழ்களில் தேங்க...
நீர் கொண்ட மேகம் கூந்தலில் நீந்த...
நேர் வந்து நின்றேன் கைகளில் ஏந்த... (அருவி)

மடல் கொண்ட காளை வாவென்று சொல்ல...
குளிர் கொண்ட வாடை ஆசையில் துள்ள...
உடல் ஒன்று சேர்ந்து உறவொன்று கொள்ள...
உயிர் கொண்ட இன்பம் நான் என்ன சொல்ல... (தேனொழுகும்)

No comments:

Post a Comment