!- START disable copy paste -->

Tuesday, May 19, 2015



113.அரசனை பார்த்த


வருடம்  
 1974                           
பாடலாசிரியர்
கண்ணதாசன்                
படம்    
அக்கரைப்பச்சை                
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்     
பாடியவர்
டி.எம்.எஸ். & பி.சுசீலா

.
                    
                          பாடல் வரிகள்

அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது ( 2 )

அது சரி அது சரி புரியுது புரியுது
ஆஹா...ஹா......ஹா....ஓஹோ......ஹோ....(அரசனை)

கைக்கெட்டும் எந்த பழமும் சில
காலம் போனா கசக்கும் - உன்
கண்ணில் தோன்றி மறையும் - வெறும்
கானல் நீரும் இனிக்கும்

அது சரி அது சரி புரியுது புரியுது
ஆஹா...ஹா......ஹா....ஓஹோ......ஹோ.... (அரசனை)

பொண்ணுங்க புத்தி பின்புத்தி உன்
பொடவையை நானும் பின்பற்றி
பூவை பறித்தது என் புத்தி
கை புண்ணாய் போனது முள் குத்தி

அது சரி அது சரி புரியுது புரியுது
ஆஹா...ஹா......ஹா....ஓஹோ......ஹோ.... (அரசனை)

தண்ணிக்கு போறா செல்லம்மா உன்
தலையில் தூக்கி பாரம்மா
பானைக்கு அதுதான் தலையம்மா
நமக்கு பட்டண வாசம் சுகமம்மா

அது சரி அது சரி புரியுது புரியுது
ஆஹா...ஹா......ஹா....ஓஹோ......ஹோ.... (அரசனை)





           

No comments:

Post a Comment