!- START disable copy paste -->

Tuesday, May 19, 2015



112.அரச்ச சந்தானம்


வருடம்   
1991                               
பாடலாசிரியர்
கங்கை அமரன்   
படம்    
சின்ன தம்பி                       
இசை
இளையராஜா                  
பாடியவர்
எஸ்.பி.பி.  

.        

                        பாடல் வரிகள்

செம்பவள முத்துக்கள... சேத்து வச்ச சித்திரமே...
தங்கவள வைரவள... போட்டிருக்கும் முத்தினமே...
வாய் மலர்ந்து நீ சிரிச்சா....பார்திருக்கும் அத்தனையும்...
நீ வளர்ந்து பாத்திருந்தா...தோத்துவிடும் இத்தனையும்...

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ....    (அரச்ச)

பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனீ
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ...
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ...
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாறு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ....    (அரச்ச)

மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நிறம் அவ பொன்நிறம் அவ சிரிக்க நெனப்பு சிதறும்
ஏலப் பூவு கோலம்போடும் ராசிதான்
பல ஜாலத்தோடு ஆடப்போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ....  (அரச்ச)

No comments:

Post a Comment