!- START disable copy paste -->

Tuesday, May 19, 2015



111.அய்யனாரு நெறஞ்ச வாழ்வு



வருடம்  
1969                                       
பாடலாசிரியர்
மாயநாதன்        
படம்    
காவல் தெய்வம்                        
இசை
டி.தேவராஜன்                              
பாடியவர்
தாராபுரம் சுந்தரராஜன் & பி சுசீலா

                            
                            பாடல் வரிகள்

அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
உன் மனசும் என் மனசும்
ஒண்ணு போல இருக்கணும் ஓ.......ஓஓஓ

பள்ளியறைத் தனிமையிலே
பாலும் பழமும் கொடுக்கணும்
பட்டுக் கன்னம் ரெண்டும் நல்ல
வெக்கத்திலே சிவக்கணும்

அறைக்கு வெளியே தோழிப் பெண்கள்
கலகலன்னு சிரிக்கணும்
அடுத்த நாளு விடிஞ்சதும்தான்
அடைச்ச கதவத் திறக்கணும்
............    (அய்யனாரு)

கஞ்சிக் கலயம் சுமந்து நானும்
தண்டை குலுங்க நடக்கணும்
நடந்து வரும் அழகைப் பாத்து
பசியும் கூடப் பறக்கணும்

அய்யனாரு கோயிலுக்கு
ஆண்டுதோறும் படைக்கணும்
அம்மா மனசு குளிரணூம்
ஆண்டவன் கண் தொறக்கணும்
............  (அய்யனாரு)

No comments:

Post a Comment