!- START disable copy paste -->

Friday, May 15, 2015



11.அங்கம் புதுவிதம் அழகினில்




1970                  
பாடலாசிரியர்
கண்ணதாசன்    
படம்   
வீட்டுக்கு வீடு                    
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்            
பாடியவர்
எஸ்.பி.பி. & எல்.ஆர்.ஈஸ்வரி   

                                                      
                          பாடல் வரிகள்

அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
மங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு

நவரச நிலவு அதிசய கனவு
நவரச நிலவு அதிசய கனவு  

பூவிரி சோலையில் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் பொன்னிற மேனியில்
விளையாடும் பொன்னழகு

மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
மயங்கி களிக்கும் அழகோ
காதலின் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு

கற்பனை அற்புதம் காதலே ஓவியம்
தொட்டதும் பட்டதும் தோன்றுமே காவியம் (அங்கம்)

தேன் சுவையோ இல்லை நான் சுவையோ
எனைத் தேடி அணைக்கும் அழகே
மைவிழி நாடக பார்வையில்
கதை நாளும் சொல்லிவிடு

பாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய
பருவக் கால இசையே
பார்த்தது மட்டும் போதுமா
ஒரு பாடம் சொல்லிவிடு

வந்தது கொஞ்சமே வருவதோ ஆயிரம்
ஒவ்வொரு நினைவிலும் உலகமே நம்மிடம் (அங்கம்)



    

No comments:

Post a Comment