109.அய்யய்யா மெல்லத்தட்டு
வருடம்
|
1968
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
என் தம்பி
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
டி.எம்.எஸ். & பி.சுசீலா
|
பாடல் வரிகள்
லல்லால்லால்
லாலாலா லாலாலா
அய்யய்யா
மெல்லத்தட்டு அய்யய்யா மெல்லத்தட்டு
கன்னம் வலி
எடுக்கும் நெஞ்சம் துடிதுடிக்கும்
ஆசை பெருகி விடும்
அங்கம் சிவந்து விடும் (அய்யய்யா)
வண்ண கண்டாங்கி
கொண்டாடும் கண்ணாட்டி உன்னோடு
சந்தோஷம் சல்லாபம்
உல்லாசம் காணாது
தீராது தீராது என்
ஆசை தீராது சிங்காரியே.......
சிங்காரி
சின்னச்சிட்டு செல்லக் கிளியல்லவோ
செவ்வந்திப்
பூவல்லவோ மஞ்சள் நிறமல்லவோ
வைர நகை
அல்லவோ............... (அய்யய்யா)
நடக்கும் பாதை
ஒன்றானது
மயக்கும் போதை
உண்டானது
சிலிர்க்கும் மேனி
செண்டானது
ஆஹா மெல்லத்தட்டு ஆஹா
மெல்லத்தட்டு
ஆஹா மெல்லத்தட்டு
மெல்லத்தட்டு மெல்லத்தட்டு
எனக்கும் ஏதோ
உண்டானது
இதற்கும் மேலே
என்னாவது
இதற்கும் மேலே
என்னாவது
அடி சித்தாடை
பாவாடை மேலாடும் முந்தானை
கொத்தோடு கொத்தாக
கொள்ளாமல் அள்ளாமல்
விட்டாலும் தீராது
சுட்டாலும் போகாதடி (சிங்காரி)
அல்லிப்பூ நீரோடை
அருகிருக்க
முல்லைப்பூ தேர்
போலே முகம் இருக்க
சொல்லத்தான் கூடாத
சுகம் கொடுக்க
அடி கட்டாணி
முத்தே நீ கண்ணோடு கண்ணாக
செந்தாழம்பூவாக
செவ்வாழைத் தண்டாக
செந்தூர பொட்டோடு
வந்தாலும் வந்தாயடி (சிங்காரி)
No comments:
Post a Comment