!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



79.அப்பனை பாடும்



வருடம்   
1943                                                         
பாடலாசிரியர்
பாபநாசம் சிவன் 
படம்    
சிவகவி                        
இசை
ஜி.ராமநாதன்           
பாடியவர்
எம்.தியாகராஜபாகவதர்


                                              பாடல் வரிகள்

வள்ளலைப் பாடும் வாயால் - அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ?
வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? வெள்ளிமலை
வள்ளலைப் பாடும் வாயால் - அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? - எந்தன்
ஸ்வாமியைப் பாடும் வாயால் - தகப்பன்
சாமியைப் பாடுவேனோ? - எந்தன்
ஸ்வாமியைப் பாடும் வாயால் - தகப்பன்
சாமியைப் பாடுவேனோ?

அப்பனைப் பாடும் வாயால் - ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ? - என்
அம்மையப்பனைப் பாடும் வாயால் - பழனி ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ?
வள்ளியின் கண் வலை வீழ் சிலை வேடன்
கள்ளனைப் பாடுவேனோ?
வள்ளியின் கண் வலை வீழ் சிலை வேடன்
கள்ளனைப் பாடுவேனோ?

அம்பிகை பாகன் எனும்
அம்பிகை பாகன் எனும் அகண்ட
ஸ்வயம்புவைப் பாடும் வாயால்
அம்பிகை பாகன் எனும் அகண்ட
ஸ்வயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் தயவால் மணம் பெறும்
தம்பியைப் பாடுவேனோ?
தும்பிக்கையான் தயவால் மணம் பெறும்
தம்பியைப் பாடுவேனோ?

No comments:

Post a Comment