!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



70.அந்தக் காலத்தில் கண்ணன்



வருடம்  
1971                                         
பாடலாசிரியர்
வாலி   
படம்    
பாபு                                      
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்         
பாடியவர்
எல்.ஆர்.ஈஸ்வரி


                                         பாடல் வரிகள்

அந்தக் காலத்தில் கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்  (அந்த)

கட்டிய ஆடை களவாடும் கண்ணன் இங்கில்லை
தன்னை காதலிக்க வேண்டும் என்ற மன்னன் இங்கில்லை
மெல்லிடை மீது துள்ளி துள்ளி மீன்கள் விளையாடும் அந்த 
மீன் தொட்டாலே ஆண் தொட்டதுபோல் நெஞ்சம்  உண்டாகும்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்  (அந்த)

வெண்ணிற ஆடை சுமந்தாடும் கடலும் கன்னியடி
அவள் ஆசை நெஞ்சின் ஆழம் என்ன கண்டவர் இல்லையடி
செந்நிற வண்ணம் தொட்டு தொட்டு சொந்தம் கொண்டாடும்
அந்தி மாலைதோறும் நாளும் இந்த நாடகம் அரங்கேறும்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம் (அந்த)

No comments:

Post a Comment