!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



65.அதோ அந்த பறவை



வருடம்    
1965                                              
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்   
ஆயிரத்தில் ஒருவன்                
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்
டி.எம்.எஸ்.                                       

           
                           பாடல் வரிகள் 


அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்   (அதோ)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்   (அதோ).

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்   (அதோ)


No comments:

Post a Comment