!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



55.அத்திக்காய் காய் காய்


வருடம்
1962                                             
பாடலாசிரியர்
கண்ணதாசன் 
படம்   
பலே பாண்டியா                     
இசை
விஸ்வநாதன் ராமமுர்த்தி 
பாடியவர்
டி.எம்.எஸ்.. & பி.சுசீலா 


                                                           பாடல் வரிகள்

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ..      (அத்திக்காய்)

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ       (அத்திக்காய்)

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளை காய்

உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ  (அத்திக்காய்)

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ (அத்திக்காய்)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சும் சுரக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ

கோதை என்னைக் காயாதே கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையில் ஏங்காய் வெண்ணிலவே (அத்திக்காய்)

No comments:

Post a Comment