!- START disable copy paste -->

Friday, May 15, 2015


46.அடேயப்பா அடேயப்பா


வருடம்       
1974
பாடலாசிரியர்
கண்ணதாசன்       
படம்   
உங்கள் விருப்பம்                       
இசை
விஜயபாஸ்கர்                          
பாடியவர்
எஸ்.பி.பி & வாணிஜயராம்

                                                      
                     
                          பாடல் வரிகள்

அடேயப்பா அடேயப்பா புரிந்ததா ஆசை இப்போது
இவள் மனம் தெரிந்ததும் பிறந்ததா காதல் இப்போது
மௌனமே என்றும் சம்மதம்
மங்கையே இன்று உன்னிடம்

அடியம்மா அடியம்மா புரிந்ததா ஆசை இப்போது
இவன் மனம் தெரிந்ததும் பிறந்ததா காதல் இப்போது
மௌனமே என்றும் சம்மதம்
மன்னனே இன்று உன்னிடம்

ஊடல் பெண்ணின் பாடல் கண்கள் காதல் வாசல்
உள்ளம் என்னும் ஊஞ்சல் உள்ளே உந்தன் ஆடல்
பூப்போன்ற பெண்மை நாடக மேடை
பொல்லாத கண்களிலே ஆயிரம் ஜாடை
என் சிட்டு வெண்பட்டு பூ மொட்டல்லவா (அடேயப்பா)

அன்னம் சின்ன அன்னம் அதிலே ரெண்டும் கன்னம்
அங்கே உங்கள் சின்னம் என்ன வேண்டும் இன்னும்
முத்துக்கள் சிந்து கண்ணே சிப்பி திறந்து
முன்னழகு காட்டிவிடு தேவையறிந்து
நான் அஞ்ச நீ கொஞ்ச நான் பிஞ்சல்லவா (அடியம்மா)

No comments:

Post a Comment