!- START disable copy paste -->

Friday, May 15, 2015


24.அடடடா மாமரக்கிளியே


வருடம்  
1978                                                       
பாடலாசிரியர்
வாலி 
படம்    
சிட்டுக்குருவி                  
இசை
இளையராஜா  
பாடியவர்
எஸ்.ஜானகி

                     பாடல் வரிகள்


அடடடா மாமரக்கிளியே உன்னை
இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சத் தண்ணி குடிக்கலையே (அடடடா)

உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன்
மாசக் கணக்கா பூசி  குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
அடடடா மாதுளம் கனியே
இத இன்னும் நீ நினைக்கலையே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே (அடடடா)

உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசம்தான் போட்டாச்சு
பாக்கு மாத்தியாச்சு
அடடடா தாமரைக் கொடியே
இது உன் தோள் தொடவில்லையே
செல்லக் கண்ணு சின்ன பொண்ணு
இத நீ நினைக்கலையே அணைக்கலையே (அடடடா)

மீனைப்  பிடிக்க தூண்டில் இருக்கு
நீரைப் பிடிக்க தோண்டி இருக்கு
அட உன்னைத்தான்  நான் பிடிக்க கண்வலைய போட்டேன்  
அடடடா மம்முத கணையே வந்து வந்து
மயக்குது எனையே இந்த
ஏக்கம் ஏது தூக்கம் பாய போட்டு
படுக்கலயே பிடிக்கலயே (அடடடா)
 




No comments:

Post a Comment