17.அஞ்சாத சிங்கம் என் காளை
வருடம்
|
1959
|
பாடலாசிரியர்
|
கு.மா.பாலசுப்ரமணியம்
|
படம்
|
வீரபாண்டியகட்டபொம்மன்
|
இசை
|
ஜி.ராமநாதன்
|
பாடியவர்
|
பி.சுசீலா
|
.
பாடல் வரிகள்
அஞ்சாத சிங்கம்
என் காளை இது
பஞ்சா பறக்கவிடும்
ஆளை இந்த
ஆபத்தை நாடி வரும்
மாவீரன் பாரிலே யாரடி
அஞ்சாத சிங்கம்
என் காளை இது
பஞ்சா பறக்கவிடும்
ஆளை
கும்மாளம் போடும்
உன் காளை இது
கொட்டம் அடங்குமடி
நாளை அங்கே
கூசாமல் போராடும்
மாவீரன் நேரிலே பாரடி
கும்மாளம் போடும்
உன் காளை இது
கொட்டம் அடங்குமடி
நாளை
கூரான கொம்பு
ரெண்டு சீராக மின்னக்கண்டு
வீரத்தை
வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு
மாறாத ஆசையுடன்
வீராப்பு பேசிக்கொண்டு
மாட்டைப் பிடிக்க
வந்து ஓட்டம் பிடித்ததுண்டு
ஆண் வாடை கண்டாலே
ஆகாது இது
ஆவேசம் கொண்டாலே
பொல்லாது (அஞ்சாத)
வேல் ஏந்தும்
காளையெல்லாம் உன்
வேல் விழியாள்
சொக்கிடுவார்
வேங்கைப்போல் துள்ளிடுவார்
வெற்றி அடைந்திடுவார்
கண்ணாலம் பண்ணாத ஆண்பிள்ளை
உனக்கு
கட்டாயம் அவனே
மாப்பிள்ளை (அஞ்சாத) .
No comments:
Post a Comment