14.அங்கே மாலை மயக்கம்
வருடம்
|
1967
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
ஊட்டி வரை
உறவு
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
பி.சுசீலா & டி.எம்.எஸ்
|
.
பாடல் வரிகள்
அங்கே மாலை
மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும் (அங்கே)
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும் (அங்கே)
ஆடச் சொல்வது தேன்
மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு (அங்கே)
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு (அங்கே)
கேட்டுக் கொள்வது
காதலின் இனிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
ஆஹாஹாஹா..ஆஹாஹாஹா
ஓஹோஹோஹோ.ஹுஹும்
ஹுஹும் (அங்கே)
No comments:
Post a Comment