!- START disable copy paste -->

Tuesday, May 19, 2015



104.அமுத தமிழில் எழுதும்


வருடம்   
1978                                             
பாடலாசிரியர்
வாலி
படம்    
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                     
பாடியவர்
பி.ஜெயச்சந்திரன்  & வாணிஜெயராம்   

.
                                                  
                         பாடல் வரிகள்


அமுதத் தமிழில் எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ - புவி
அரசர் குலமும் வணங்கும் புகழின்
புரட்சித் தலைவன் நீ புரட்சித் தலைவன் நீ

இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை லயமும் நீ - பிறை
இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ விளக்க உரையும் நீ

நாணம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
உன்னை ஒரு கணமும் என்னை மறு கணமும்
மேலும் நினைப்பதென்ன மேலும் நினைப்பதென்ன

நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு
என்னை அழைப்பதென்ன
ஊஞ்சல் அசைந்து வரும் நீல விழியிரண்டில்
வண்ணம் சிவப்பதென்ன வண்ணம் சிவப்பதென்ன

எதுகை அது உனது இரு கை அதில்
எனது பெண்மை ஆடட்டுமே
ஒரு கை குழல் தழுவ மறு கை உடல் தழுவ
இன்பம் தேடட்டுமே இன்பம் தேடட்டுமே

வைகை அணை திறந்து வைகை அடை மதுரை
வைகை அணை போலவே
மங்கை எனும் அமுத கங்கை பெருகுவது
நீந்திக் கரை காணவே நீந்திக் கரை காணவே   (அமுதத்)

No comments:

Post a Comment