!- START disable copy paste -->

Friday, May 15, 2015

06.அக்கம் பக்கம் பார்க்காதே



வருடம்  
1963                                                         
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்    
நீதிக்கு பின் பாசம்                  
இசை
கே.வி.மகாதேவன் 
பாடியவர்
டி.எம்.எஸ் & பி.சுசீலா     

.
                       
                                                                    பாடல் வரிகள்

அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே
ஹாண்டில் பாரை ஓடிக்காதே (அக்கம்)

கையக் கைய வளைக்காதே
கண்ணைக் கண்டு மிரளாதே
பையப் பைய ஒதுங்காதே
பள்ளம் பார்த்து போகாதே (அக்கம் )

போக்குவரத்து அதிகமிருக்கு
மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ
பொண்ணப் பாத்தா போக்குவரத்தும்
நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ - இந்தப்
பொண்ணப் பாத்தா போக்குவரத்தும்
நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ
ஆஆஆஆ...ஓஓஓஓ.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...........

(அக்கம் பக்கம் பார்க்காதே)

போலீஸ்காரன் ஸ்டாப்பின்னு சொன்னா
பொட்டுன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ                                 சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும்                            பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ                                                   
ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு                                    அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு 
அய்யா அருகில் இருந்ததினாலே                                       ஆபத்தில்லாமே போயிடுச்சு - இந்த                                    அய்யா அருகில் இருந்ததினாலே
ஆபத்தில்லாமே போயிடுச்சு
ஆஆஆஆ...ஓஓஓஓ.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..........

(அக்கம் பக்கம் பார்க்காதே)

No comments:

Post a Comment