90.அம்மா என்பது தமிழ்
வருடம்
|
1968
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
டீச்சரம்மா
|
இசை
|
டி.ஆர்.பாப்பா
|
பாடியவர்
|
பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அம்மா என்பது
தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின்
முதல் வார்த்தை
அம்மா இல்லாத
குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும்
அருள் வார்த்தை (அம்மா)
கவலையில் வருவதும்
அம்மா அம்மா
கருணையில்
வருவதும் அம்மா அம்மா
தவறு செய்தாலும்
மன்னிப்புக்காக
தருமத்தை
அழைப்பதும் அம்மா அம்மா (அம்மா)
பூமியின் பெயரும்
அம்மா அம்மா
புண்ணிய நதியும்
அம்மா அம்மா
தாய்மொழி என்றும்
தாயகம் என்றும்
தாரணி அழைப்பதும்
அம்மா அம்மா (அம்மா)
No comments:
Post a Comment