!- START disable copy paste -->

Friday, May 15, 2015

08.அகர முதல எழுத்தெல்லாம்




வருடம்
1966                                   
பாடலாசிரியர்
கண்ணதாசன்   
படம்   
சரஸ்வதி சபதம்                
இசை
கே.வி.மகாதேவன்  
பாடியவர்
டி.எம்.எஸ்.                                         



                       பாடல் வரிகள்

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே

உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்
அம்மா பேச வைத்தாய்     (அகர)

எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி  (அகர)






No comments:

Post a Comment